தென்னிந்தியாவின் முன்னணி செய்தி மற்றும் பத்திரிகை நிறுவனமாக வருவது நமது கலாட்டா நிறுவனம்.20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு தரமான நம்பத்தக்க அரசியல்,சினிமா,விளையாட்டு என பல செய்திகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறோம்.இணையத்தளம்,யூடியூப் என எங்களை தொடர்ந்து ரசிகர்களும் பாராட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை தாண்டி பல துறைகளில் இருக்கும் பல சாதனையாளர்களை கலாட்டா கௌரவிக்க ஒருபோதும் தவறியதில்லை.அப்படி சினிமா துறையில் வருடா வருடம் விருது விழா நடத்தி பல கலைஞர்களுக்கும் அங்கீகாரம் வழங்கி வருகிறோம்.இந்த வருடம் இதுவரை தென்னிந்திய அளவில் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு பிரம்மாண்ட விழாவாக The Galatta Crown 2022 விருது விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

அறிமுக கலைஞர்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் வரை தென்னிந்தியாவை சேர்ந்த பலரும் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள்,நடன கலைஞர்கள் என பலருக்கும் அவர்களது பணியை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன்,நயன்தாரா,வெங்கட் பிரபு,அனிருத்,லோகேஷ் கனகராஜ் என பலரும் இந்த விருது விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.சிறந்த நடிகர்கள்,சிறந்த இசையமைப்பாளர் என பல விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.பல புதிய மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் பல விருதுகளை ரசிகர்களின் கரகோஷத்தோடு அள்ளி வருகின்றனர்.