தென்னிந்தியாவின் முன்னணி செய்தி மற்றும் பத்திரிகை நிறுவனமாக வருவது நமது கலாட்டா நிறுவனம்.20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு தரமான நம்பத்தக்க அரசியல்,சினிமா,விளையாட்டு என பல செய்திகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறோம்.இணையத்தளம்,யூடியூப் என எங்களை தொடர்ந்து ரசிகர்களும் பாராட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை தாண்டி பல துறைகளில் இருக்கும் பல சாதனையாளர்களை கலாட்டா கௌரவிக்க ஒருபோதும் தவறியதில்லை.அப்படி சினிமா துறையில் வருடா வருடம் விருது விழா நடத்தி பல கலைஞர்களுக்கும் அங்கீகாரம் வழங்கி வருகிறோம்.இந்த வருடம் இதுவரை தென்னிந்திய அளவில் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு பிரம்மாண்ட விழாவாக The Galatta Crown 2022 விருது விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

அறிமுக கலைஞர்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் வரை தென்னிந்தியாவை சேர்ந்த பலரும் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த விழாவில் பலரின் திறமை மற்றும் உழைப்பை பாராட்டி விருந்துகள் வழங்கி கௌரவித்து வருகிறோம்.

சிவகார்த்திகேயன்,உதயநிதி ஸ்டாலின்,ராகவா லாரன்ஸ்,ஆர்யா,ஜீ.வி.பிரகாஷ்,ப்ரியங்கா மோகன்,க்ரிதி ஷெட்டி,எஸ் ஜே சூர்யா,கல்யாணி ப்ரியதர்ஷன்,பா ரஞ்சித்,வெங்கட் பிரபு,யோகி பாபு என இன்னும் பல நட்சத்திரங்கள் தற்போது வரை வந்து விழாவை சிறப்பு வருகின்றனர்.தொடர்ந்து பல நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.ஒரு மாபெரும் நிகழ்வாக இந்த விருது விழா தற்போது அரங்கேறி வருகிறது.