திரைபிரபலங்களை கௌரவித்து கலாட்டா சார்பில் The Galatta Crown 2022 விருது விழா நடைபெற்று தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.பல பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்து வருகின்றனர்.

அறிமுக நட்சத்திரங்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் வரை பலரும் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் சிறப்பாக பணியாற்றிய பல நட்சத்திரங்களையும் கலாட்டா கௌரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோட்ட டாக்டர்,மாநாடு என பல படங்கள் பல விருதுகளை அள்ளி வருகின்றன.அதில் மிக முக்கிய விருதான ரசிகர்களின் மனம் கவர்ந்த Favourite நாயகன் என்ற விருதினை சிவகார்த்திகேயன் வென்றிருந்தார்.

வழக்கம் போல தனது பேச்சால் ரசிகர்களை ஈர்த்தார் சிவகார்த்திகேயன் , இன்னும் நிறைய பண்ணணும்னு ஆசை இருக்கு , நிறைய கண்டிப்பா பண்ணுவேன் இது மாதிரி விருதுகள் தான் எங்களுக்கு நம்பிக்கை தரும் என்று தெரிவித்துள்ளார்.இவரது முழு பேச்சை விரைவில் வீடியோவாக காணலாம்