கலாட்டா சார்பில் திரைபிரபலங்களை கௌரவித்து விருதுகள் வழங்குவது வழக்கம்.அப்படி இந்த வருடம் The Galatta Crown 2022 விருது விழாவை சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் சிறந்த திறமைகளை தேர்நதெடுத்து அதில் பணியாற்றிய பிரபலங்களை கௌரவப்படுத்தி வருகிறோம்.

அறிமுக கலைஞர்கள் முதல் முன்னணி நட்சத்திரங்கள் வரை பலரும் இந்த The Galatta Crown 2022 விருது விழாவில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.திரைப்படங்களில் பணியாற்றிய பல கலைஞர்களுக்கும் பல விருதுகளை வழங்கி கலாட்டா சிறப்பித்து வருகிறது.

இந்த விழாவில் இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்.பாலிவுட் நட்சத்திரங்களில் முக்கிய நடிகரான இவர் என்ட்ரி முதலே அரங்கம் அதிர தனது எனர்ஜியால் ரசிகர்களை பிரம்மிப்படைய வைத்தார்.

ரசிகர்களின் விசில் சத்தத்துடன் மாலை மரியாதையுடன் மேல தாளத்துடன் பட்டையை கிளப்பும் நடந்தால் அரங்கத்தை அதிர வைத்தார் ரன்வீர் சிங்,இவரது பட்டையை கிளப்பும் நடன வீடீயோவை விரைவில் நமது கலாட்டா யூடியூப்பில் காணலாம்.