விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் இதோ..

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை பார்க்க 5 காரணங்கள் இதோ - Five reason to watch pichaikkaran 2 | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து பின் நடிகராக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகமடைய செய்து விஜய் ஆண்டனி படம் என்றாலே ஏமாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையை கொடுத்து வருகிறார். அதன்படி நான், சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது அடுத்த திரைப்படமான பிச்சைக்காரன் 2 திரைப்படம் நாளை மே 19 தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை பார்பதற்கு முக்கியமான 5 காரணங்கள் குறித்த சிறப்பு கட்டுரை இதோ..

இயக்குனராக விஜய் ஆண்டனி

ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ரசிகர்களை இதுவரை உற்சாகப் படுத்தி வந்த  விஜய் ஆண்டனி. தற்போது இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனி முதல் முறையாக கதை எழுதி அதை இயக்கியுள்ளது இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது.

actor sharwanand and rakshitha reddy to have royal wedding in jaipur

பல்துறையில் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. இப்படத்தில் நடிப்பது இயக்குவது மட்டுமல்லாமல் பிச்சைகாரன் 2 திரைப்படத்திற்கு படத்தொகுப்பும் செய்துள்ளார். மேலும் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பிலே இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

actor sharwanand and rakshitha reddy to have royal wedding in jaipur

சக நடிகர்கள்

விஜய் ஆண்டனி படங்களில் இதுவரை ஒரு சில முக்கிய நடிகர்கள் மட்டுமே இருப்பார். மற்றவர் பெரும்பாலும் புதுமுகங்களாக இதுவரை இருந்து வந்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலும் மக்களுக்கு பரிச்சையாமான  பல முகங்கள் நடித்துள்ளனர். தெலுங்கு, இந்தி, பஞ்சாபி மொழிகளில் நடித்து பிரபலமான காவ்யா தாப்பர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும் இவர்களுடன் தேவ்கில், மன்சூர் அலிகான், ஜான் விஜய், யோகி பாபு, டத்தோ ராதா ரவி, ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

actor sharwanand and rakshitha reddy to have royal wedding in jaipur

'பிச்சைக்காரன்' தலைப்பு

அம்மா செண்டிமெண்ட்டை கருவாக கொண்டு உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. அந்த படத்தின் தலைப்பை இரண்டாவது பாகத்திற்கு பயன்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை உயர்த்தியுள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க வேறு கதைகளத்தில் சமூக கருதுக்களையும்ம் ஊழலுக்கு எதிரான கருத்துகளை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

actor sharwanand and rakshitha reddy to have royal wedding in jaipur

Anti Bikili

படத்தின் அறிவிப்பிலிருந்தே  ‘ஆண்டி பிக்கிலி’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இப்படத்தின் மீதான ஆர்வத்தை விஜய் ஆண்டனி உருவாக்கி வைத்திருந்தார். அதன்படி வித்தியாசமான உருவ பொம்மையை பிக்கிலி என்று அறிமுகம் செய்து பாடலும் வெளியிட்டார். அந்த பாடல் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலானதும் குறிப்பிடதக்கது. ஊழல்வாதியின் முழு உருவம் பிக்கிலி என்று அறிமுக செய்த விஜய் ஆண்டனி அதனை இந்த படத்தில் எப்படி கொண்டு வருவார் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது. 

actor sharwanand and rakshitha reddy to have royal wedding in jaipur

“தேவையே இல்லன்னு சொல்லியும் நான் வெச்ச காட்சிகள்..” சூப்பர் டீலக்ஸ் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா  - Exclusive Interview இதோ..
சினிமா

“தேவையே இல்லன்னு சொல்லியும் நான் வெச்ச காட்சிகள்..” சூப்பர் டீலக்ஸ் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா - Exclusive Interview இதோ..

“இந்து மதத்திற்காக பேசி ரூ 40 கோடி வரை இழந்துள்ளேன்..” வைரலாகும் கங்கனா ரனாவத் பதிவு.. விவரம் உள்ளே..
சினிமா

“இந்து மதத்திற்காக பேசி ரூ 40 கோடி வரை இழந்துள்ளேன்..” வைரலாகும் கங்கனா ரனாவத் பதிவு.. விவரம் உள்ளே..

“வாய்ப்பு கேட்டு வரும் போது இவ்ளோ திமிரு?.” வைரமுத்து குறித்து இயக்குனர் பாரதிராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..
சினிமா

“வாய்ப்பு கேட்டு வரும் போது இவ்ளோ திமிரு?.” வைரமுத்து குறித்து இயக்குனர் பாரதிராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..