“தேவையே இல்லன்னு சொல்லியும் நான் வெச்ச காட்சிகள்..” சூப்பர் டீலக்ஸ் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா - Exclusive Interview இதோ..

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் குறித்து தியாகராஜன் குமாரராஜா வீடியோ உள்ளே - Thiagarajan kumararaja about super deluxe movie | Galatta

'ஆரண்ய காண்டம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. தன் முதல் படத்திலே தனக்கென தனி ரசிகர் கூட்டம் அவருக்கு அமைந்தது. முதல் படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து தன் தயாரிப்பிலே தனது இரண்டாவது படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கிய தியாகராஜன் குமாரராஜின் இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் பொது மக்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.  

அதை தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பிற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ‘மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தலாஜி தொடரில் தியாகராஜன் குமாரராஜா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.  மேலும் தொடரில் இடம் பெற்றுள்ள ஒரு எபிசோடையும் இயக்கியுள்ளார். இது அவரது ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நாளை அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மாடர்ன் லவ் சென்னை’ இணைய தொடர் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் இயக்குனர் தியாகராஜா குமராராஜா அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இதில் தன் கதைகளை மற்றவருடன் ஆலோசனை பெறுவது குறித்து தியாகராஜன் குமாரராஜா பேசுகையில்

நான் சில பேரிடம் கதையை படிக்க கொடுப்பேன்.‌ அதில் பெரிய ஆலோசனை கிடைக்காது. இந்த மாடர்ன் லவ் சென்னை படத்தில் ஒருசில விஷயங்கள் ஆலோசனையாக கிடைத்தது.  ஒரு இயக்குனின் பார்வையிலிருந்து தான் திரைப்படம் பன்றோம். அதுல ஏன் இன்னொருத்தவருடைய நிலைபாடு வருகிறது. அதே நேரம் அவங்க பார்வையில் ஒரு ஏற்புடைய நிலைபாடு இருந்தால் நான் அதை ஏற்றுக் கொள்வேன். ஒளிப்பதிவாளர் பி.எஸ் வினோத் அவரிடம் சூப்பர் டீலக்ஸ் கதை சொல்லும் போது.. தயவு செய்து ஏலியன் காட்சி, காவல் நிலைய காட்சி ஓவர் டிராமாவ இருக்கு, தனசேகர் (மிஷ்கின்) கதாபாத்திரம் நல்லாவே இல்ல.. இதெல்லாம் தூக்கிடு.. இதெல்லாம் படத்துக்கு தேவையே இல்லை.. ஏன்‌ பன்றனு கேட்டார். ஆனால் எனக்கு அந்த காட்சிகளெல்லாம் ஏற்புடையதா இருந்தது..  அதை செய்து விட்டேன்.  எனக்கு அவர்மீது எல்லையற்ற மரியாதை இருக்கிறது. நான் எப்போது கதை எழுதினாலும் அவரிடம் தான் முதலில் சொல்வேன்.  ஆனால் எனக்கு அந்த படத்தை நினைத்தபடி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். " என்றார் தியாகராஜன் குமாரராஜா.

மேலும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோவை காண..

 

'தெகிடி' திரைப்படத்தை தொடர்ந்து கிரைம் திரில்லரில் மீண்டும் களமிறங்கும் அசோக் செல்வன்.. – வைரலாகும் மிரட்டலான First Look இதோ..
சினிமா

'தெகிடி' திரைப்படத்தை தொடர்ந்து கிரைம் திரில்லரில் மீண்டும் களமிறங்கும் அசோக் செல்வன்.. – வைரலாகும் மிரட்டலான First Look இதோ..

மலையாளத்தில் 100 கோடி வசூலை குவித்த ‘2018’..  தமிழில் வெளியாவது எப்போது? – அட்டகாசமான அறிவிப்பு இதோ.
சினிமா

மலையாளத்தில் 100 கோடி வசூலை குவித்த ‘2018’.. தமிழில் வெளியாவது எப்போது? – அட்டகாசமான அறிவிப்பு இதோ.

தியாகராஜன் குமாரராஜாவை புகழ்ந்து பாராட்டிய ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன்.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு.. பின்னணி இதோ..
சினிமா

தியாகராஜன் குமாரராஜாவை புகழ்ந்து பாராட்டிய ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன்.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு.. பின்னணி இதோ..