தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் மஹேஸ்வரி.சன் ம்யூஸிக்கில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன் தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார் மஹேஸ்வரி.இந்த தொடரின் மூலம் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தொடர்ந்து புது கவிதை சீரியலில் ஹீரோயினாக அசத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் மஹேஸ்வரி.திருமணத்திற்கு பிறகு ஒரு பிரேக் எடுத்துக்கொண்டார் மஹேஸ்வரி.

இதனை அடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளராக மாறிய மஹேஸ்வரி பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார்.குயில்,மந்திர புன்னகை,சென்னை 28 2 உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் மஹேஸ்வரி.கடைசியாக இவர் நடித்திருந்த சென்னை 28 படத்தில் இவரது கேரக்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

கொரோனா நேரத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது மகேஷ்வரியின் போட்டோஷூட்கள்.செம வைரலாக இவரது போட்டோஷூட்கள் ரசிகர்களிடம் இருந்து வந்தன.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.நிதின் சத்யா தயாரிப்பில் மஹத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மஹேஸ்வரி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.சில வருடங்களுக்கு பிறகு இவர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)