தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இதனை தொடர்ந்து புதுயுகம் சேனலில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.இதனை தொடர்ந்து தற்போது தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அஞ்சனா எப்போதும் தனது இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருப்பவர்.இவரது புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று,லைக்குகளை அள்ளும்.சில மாதங்களுக்கு முன் சன் மியூசிக்கிற்கு மீண்டும் வந்து ஒரு ஷோவை சில நாட்கள் தொகுத்து வழங்கினார் அஞ்சனா.அத்துடன் சமீபத்தில் முடிந்த ஜீ தமிழின் விருது நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார் அஞ்சனா.

சமீபத்தில் முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார் அஞ்சனா.சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனது பெயரை பேஸ்புக்கில் சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும் அவர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

vj anjana rangan clarifies about fake facebook account