பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஸ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியை கலக்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஸ்வின்.

இவர் தற்போது பீகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்திய ரெபாவுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.இந்த பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது.செம எனர்ஜெட்டிக் ஆன துள்ளலான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி தொடர் இறுதிக்கட்டடத்தை எட்டியுள்ளது.இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 பைனல் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த இறுதிப்போட்டி வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.இந்த இறுதிப்போட்டி ஷூட்டிங்கில் சிவாங்கியுடன் இணைந்து அஸ்வின் நடனமாடி உள்ளார் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.