விஷாலின் மிரட்டலான ஆக்சன் அவதாரத்தில் வரும் மார்க் ஆண்டனி பட கருப்பண்ணசாமி பாடல்! அதிரடியான லிரிக் வீடியோ இதோ

விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட கருப்பண்ண சாமி பாடல் வெளியீடு,vishal sj suryah in mark antony movie karuppanna saamy song out now  | Galatta

விஷால் மற்றும் S.J.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் கருப்பண்ண சாமி பாடல் வெளியானது.  ஆக்சன் ஹீரோவாக தொடர்ந்து அதிரடி கதை கலங்கள் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். அந்த வகையில் தனது அடுத்த மாஸ் ஆக்ஷன் படமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் #விஷால்34 படத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார். ஏற்கனவே விஷால் - ஹரி கூட்டணியில் வந்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றி படமாக விஷால்34 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல் முறை இயக்குனராக களமிறங்கும் நடிகர் விஷால் விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என தெரிகிறது.

இந்த வரிசையில் முன்னதாக விஷால் நடிப்பில் அடுத்த ரிலீசுக்கு தயாராகி இருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் விஷால் உடன் இணைந்து நடிகர் SJ.சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகரான SJ.சூர்யா அவர்கள் தற்போது இயக்குனர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்த தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து நடிகர் தனுஷ் தனது 50வது படமாக இயக்கி நடிக்கும் D50 படத்திலும் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து SJ.சூர்யா நடித்திருக்கும் ஜிகர்தண்டா திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாக காத்திருக்கிறது. இந்த வரிசையில் SJ.சூர்யா நடிப்பில் அடுத்த முக்கிய படமாக மார்க் ஆண்டனி படம் வெளிவர இருக்கிறது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முனனணி கதாபாத்திரங்களில் நடிக்க, ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கூடுதல் சர்ப்ரைஸாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக கொடி கட்டி பறந்த சில்க் ஸ்மிதா இருக்கிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உருவம் கொண்ட நடிகையயோ அல்லது CGI முறையிலோ பட குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர் என தெரிகிறது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தி வெளியீடாக வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் அடுத்த பாடலாக கருப்பண்ண சாமி வெளியானது. விஷாலின் அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த மிரட்டலான பாடலாக வந்திருக்கும் இந்த கருப்பண்ண சாமி பாடல் இதோ…