விஜய் ஆண்டனியின் பொலிட்டிக்கல் த்ரில்லராக வரும் ரத்தம்... ரசிகர்களை கவர்ந்த விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

விஜய் ஆண்டனியின் ரத்தம் பட ட்ரெய்லர் வெளியீடு,vijay antony in raththam movie trailer out now | Galatta

தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ரத்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இசையமைப்பாளராக தனக்கென தனி பாணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்து ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கா இடம் பிடித்து தமிழ் சினிமாவின் முன்னணி  இசையமைப்பாளரான திகழும் விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து நடிகராகவும் களமிறங்கி அடுத்தடுத்து வரிசையாக பல படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் மட்டுமின்றி, தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் விஜய் ஆண்டனி அவர்கள் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இந்த 2023ம் ஆண்டில் மட்டும் இதுவரை விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில் தமிழரசன், பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய படங்கள் வரிசையாக வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அசத்தலான படங்கள் தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் முதல் முறை ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ரோமியோ எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்திலும் தற்போது விஐய் ஆண்டனி நடித்து வரும் விஜய் ஆண்டனி, ஏற்கனவே , மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் அக்னி சிறகுகள் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக நடித்திருக்கும் படம் தான் ரத்தம்.விஜய் ஆண்டனி உடன் இணைந்து மஹிமா நம்பியார் நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ரத்தம் திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்குனராகப் பணியாற்றி இருக்கும் ரத்தம் திரைப்படத்தில் திலிப் சுப்ராயன் அவர்கள் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்தம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விரைவில் படம் வெளியாகும் என மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மீண்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரத்தம் திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் தற்போது வெளியானது. விஜய் ஆண்டனியின் அதிரடி ஆக்ஷனில் வெளிவந்திருக்கும் ரத்தம் படத்தின் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.