'லியோ'க்கு முன் வெளியாகும் த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் படம்... ரிலீஸ் தேதி அறிவிப்புடன் வந்த ஸ்பெஷல் வீடியோ இதோ!

திரிஷாவின் தி ரோட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,trisha in the road movie release date announcement | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் தி ரோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கென தனி பாணியில் நடித்து கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக  ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக சக்திகளும் நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வன் 2. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தார் திரிஷா. அதைத்தொடர்ந்து நடிகை திரிஷா நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் முன்னதாக நடிகர் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்திருக்கும் சதுரங்க வேட்டை - 2 திரைப்படம் நிறைவடைந்து நீண்ட காலமாக ரிலீஸ் காக காத்திருக்கிறது. அதேபோல் முதல் முறையாக த்ரிஷா நடித்திருக்கும் பிருந்தா வெப் சீரீஸ் விரைவில் சோனி லைவ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது. இந்த பிருந்தா வெப்சீரிஸில் த்ரிஷா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் ராம் பார்ட் 1 திரைப்படத்தில் திரிஷா தற்போது நடித்து வருகிறார். திரிஷ்யம் திரைப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ராம் பார்ட் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வரிசையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமான லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களின் வரிசையில் ஐந்தாவது படமாக விஜய் - திரிஷா கூட்டணியில் உருவாகும் லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் மற்றொரு அதிரடி ஆக்சன் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தி ரோட் திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஷபீர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவரும் பிரபல நடிகருமான சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, நேகா ஷஹின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி ரோட் திரைப்படத்தில் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் வருகிற அக்டோபர் 6ம் தேதி தி ரோட் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த ஸ்பெஷல் வீடியோ இதோ…