சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் பட அடுத்த அதிரடி ட்ரீட்... மேத்யூவாக மிரட்டிய மோகன்லாலின் பக்கா மாஸ் தீம் & வீடியோ இதோ!

சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் படத்திலிருந்து மோகன்லாலின்  தீம் வெளியானது,rajinikanth in jailer movie mathew theme video out now mohanlal | Galatta

இயக்குனர் நெல்சனின் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த மோகன்லாலின் மேத்தீவ் கதாபாத்திரத்தின் தீம் மியூசிக் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற தவறை நிலையில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தற்போது வெளிவந்திருக்கும் செயலர் திரைப்படம் குறித்து செய்திருக்கிறது முதல் முறையாக இயக்குனர் நெல்சன் உடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் ஒரு திரைப்படம் வெளிவந்த முதல் இரண்டு வாரங்களிலேயே 525 கோடிக்கு மேல் வசூலித்து இதுவரை தமிழ் சினிமா கண்டிராத மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அமேசான் பிரைம் வீடியோவிலும் ரிலீஸாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த இமாலய வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக காரை கலாநிதி மாறன் அவர்கள் பரிசளித்தார். தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு போர்ஷே ரக காரை பரிசளித்தார்.  

ஜெயிலர் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் படத்தில் மிக குறுகிய இடங்களில் மட்டும் தோன்றினாலும் ஒட்டுமொத்த திரையரங்கையும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர வைத்தனர். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து நரசிம்மா என்ற கௌரவ வேடத்தில் நடித்த சிவராஜ்குமார் அவர்களின் தீம் மியூசிக்கை வீடியோவாக படக்குழு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து  மற்றொரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நேட்டிவ் என்ற வேடத்தில் நடித்த மோகன்லாலின் தீம் மியூசிக் மற்றும் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.  "எந்தா மோனே" ஏன்னா தனக்கே உரித்தான ஸ்டைலில் வசனம் பேசிய மோகன்லால் கிளைமாக்ஸ் காட்சியில் லாரிகள் கவர்ந்து விழும்போது சிகார் பிடித்தபடி காரில் இருந்து நடந்து வரும் காட்சி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஆட்சியாக அமைந்துள்ளது இந்த நிலையில் இந்த காட்சிகள் அமைந்த ஸ்பெஷல் வீடியோவை பட குழு தற்போது வெளியிட்டுள்ளது. மாஸான அந்த வீடியோ இதோ…