ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் ட்ரீட்... யுவன் இசையில் ரொமான்டிக்கான அழகாய் பாடல் இதோ!

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட அழகாய் பாடல் வெளியீடு,jayam ravi in iraivan movie azhagai out now nayanthara | Galatta

இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் இறைவன் திரைப்படத்திலிருந்து அழகாய் எனும் பாடல் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக  தொடரந்து அனைத்து வயது ரசிகர்களும் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் தரமான கதைக்களங்களையும் நல்ல நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து மக்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. அந்த வகையில் தொடரச்சியாக ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து மக்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. 

அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் . சமீபத்தில் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் சைரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். 

இதனிடையே ஜெயம் ரவி நடிப்பில் அடுத்த அதிரடி படமாக ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் படம் தான் இறைவன். வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திஇறைவன் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக விஸ்வரூபம் பட வில்லன் நடிகர் ராகுல் போஸ் நடிக்க, ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன்,  சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள், பக்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, இறைவன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் இறைவன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளிவந்த இறைவன் படத்தின் ட்ரைலர் பக்கா சைக்கோ சீரியல் கில்லர் படமாக ரசிகர்களுக்கு புது ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக இறைவன் திரைப்படத்திலிருந்து அழகாய் எனும் ரொமான்டிக் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.