தமிழ் திரை உலகில் தொடர்ந்து ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் . தொடர்ந்து துப்பரிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு முழுவீங்சில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. விரைவில் விஷால் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் அடுத்ததாக விஷால் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் லத்தி. ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்திருக்கும் லத்தி படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் இளையதிலகம் பிரபு நடித்துள்ளார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக லத்தி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

And ! That's a wrap for #Laththi. Coming soon world wide in theatres near you. #Laatti #LaththiCharge@RanaProduction0 @vishalkofficial @thisisysr @TheSunainaa @dir_vinothkumar @actorramanaa @nandaa_actor @balasubramaniem @PeterHeinOffl @HariKr_official @johnsoncinepro pic.twitter.com/j155QDEoSW

— RANA PRODUCTIONS (@RanaProduction0) July 15, 2022