தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக இவர் நடித்த டான் படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,ப்ரின்ஸ்,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது,இதனை அடுத்து அயலான் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இந்த படத்தினை இயக்குகிறார்.ஆடை,மண்டேலா படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் அறிவிப்பு குறித்த மிரட்டலான ஒரு ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதிரடியான இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்