தொடர்ந்து ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட யோசனைகளை திரைப்படமாக வழங்கும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த பிரமிப்பான படைப்பாக வெளிவந்துள்ளது இரவின் நிழல். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிட இன்று ஜூலை 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகயுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இரவின் நிழல் திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot Movie) திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் தயாராகியுள்ளது. 

இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்தர்.A.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

இரவின் நிழல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து மாயவா தூயவா வீடியோ பாடல் தற்போது வெளியானது. ரொமான்டிக்கான இந்த மாயவா தூயவா வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.