சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் சந்திரமுகி திரைப்படம் இயக்குனர் P.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மணிச்சித்ரதாழ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக சந்திரமுகி தயாரானது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துடன் இணைந்து ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வைகைபுயல் வடிவேலு, மாளவிகா, செம்மீன் ஷீலா, வினித் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனிடையே சந்திரமுகியை படத்தின் 2-ம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இயக்குனர் P.வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். RD.ராஜசேகர் ஒளிப்பதிவில், பாகுபலி,RRR படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசை அமைக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்ற உள்ளார்.

சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூரில் தொடங்க உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து லாரன்ஸ் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

Hi friends and fans, Today Chandramukhi 2 shooting begins in Mysore with my Thalaivar and guru’s @rajinikanth blessings! I need all your wishes! 🙏🏼🙏🏼 #Chandramukhi2 pic.twitter.com/dSrD3B5Xwh

— Raghava Lawrence (@offl_Lawrence) July 15, 2022