தமிழ் சினிமாவின் அதிரடி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து ஆக்ஷன் பிளாக் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் நடிகர் SJ.சூர்யா மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் விஷால் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி.

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் லத்தி திரைப்படம் வெளிவர தயாராகி வருகிறது.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் முதல் பாடலாக "தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்" என்ற பாடல் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ இதோ…
 

Get ready - #ThottaLoadAageWaiting - The first single from #Laththi is locked and loaded

Releasing on October 5th #Laththi #Laatti #LaththiChargehttps://t.co/SMYbNb1kQS@RanaProduction0 @nandaa_actor @thisisysr @U1Records @balasubramaniem @dir_vinothkumar @TheSunainaa pic.twitter.com/fH0Xf2tMLO

— Vishal (@VishalKOfficial) October 1, 2022