படத்திற்கு படம் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது இந்திய அளவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் துல்கர் சல்மான் முன்னதாக பேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்துள்ள கன்ஸ் & குலாப் வெப்சீரிஸ் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக துல்கர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் த்ரில்லர் படமாக துல்கர் நடித்த சுப்- ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் திரைப்படமும் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கவனத்தை ஈர்த்தது. 

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் கிங் ஆப் கோத்தா. ZEE STUDIOS மற்றும் WAYFARER FILMS இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த தினங்களுக்கு முன்பு கிங் ஆப் கோத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என PAN INDIA திரைப்படமாக கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் தயாராகவுள்ளது. இந்நிலையில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
 

Presenting to you the first look poster of King Of Kotha/KOK !!! @dulQuer@AbhilashJoshiy @ZeeStudios_ @zeestudiossouth @DQsWayfarerFilm @kokmovie #kingofkotha #KOKfirstlook #DulquerSalmaan #dulquer pic.twitter.com/Vc2zEu4TkM

— Wayfarer Films (@DQsWayfarerFilm) October 1, 2022