வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
By Anand S | Galatta | October 02, 2022 11:13 AM IST

பல கோடி தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் காமடியனாக, மக்கள் மனதை ஆளும் நகைச்சுவை மன்னனாக திகழும் வைகை புயல் வடிவேலு அவர்கள் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் வடிவேலு உடன் இணைந்து ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன
முன்னதாக வடிவேலுவின் கதாபாத்திரங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமான கதாபாத்திரங்களில் ஒன்றான நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயரில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
பக்கா காமெடி என்டர்டெய்னராக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படண்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் நடனப்புயல் பிரபு தேவா இப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கான பாடல் ரெக்கார்டிங் பணிகளின்போது இயக்குனர் சுராஜ், வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவரும் இணைந்திருக்கும் புதிய புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் “லவ் யூ லெஜண்ட்” என வடிவேலுவை குறிப்பிட்டிருக்கிறார் அந்த புகைப்படம் இதோ…