தமிழ் சினிமாவின் தனது விடாமுயற்சியால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று வளர்ந்து வரும் இளம்நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் விஷால்.கமர்ஷியல் படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை வியக்க வைப்பார்.

கடைசியாக இவரது சக்ரா படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.அடுத்தாக எனிமி,வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விஷால்.எனிமி படம் விரைவில் வெளிவரவுள்ளது இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவரது வீரமே வாகை சூடும் படம் பட பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.விஷால் 32 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்குகிறார்.விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர்.

சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சுனைனா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.