தமிழ் திரையுலகில் புரட்சி தளபதியாய் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருபவர் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் எனிமி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். துபாயில் நடைபெற்ற எனிமி படப்பிடிப்பில், 50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் விஷால் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இதையடுத்து சென்னையில் நடக்கவிருக்கும் எனிமி இறுதி கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். 

இந்நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் விஷால் 31 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விஷால் நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்க, பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், மூர்த்தி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படம் விஷாலின் 31 வது படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

VFF எனப்படும் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான அறிவிப்பில் Not a Comman man என்ற கேப்ஷனுடன் உள்ள இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உட்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஷால் கைவசம் துப்பறிவாளன் 2 திரைப்படம் உள்ளது. 

அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் தற்போதெல்லாம் கமர்சியல் படங்களை தவிர்த்து விட்டு சமூக அக்கறையுள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.