வசூலை அள்ளி குவிக்கும் ஆட்டநாயகன் விஜய் – வாரிசு படக்குழு அறிவித்த 7 நாள் வசூல் விவரம்.. ரசிகர்கள் வைரலாக்கி வரும் பதிவு இதோ..

ஒரு வாரத்தில் 210 கோடி வசூலை குவித்த விஜயின் வாரிசு திரைப்படம்  - Vijay varisu reach 210 crores in worldwide | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘வாரிசு’. தளபதி விஜயின் நடிப்பில் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11ம் தேதி உலகெங்கிலும் வெளியானது. வாரிசு திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்த நிலையிலும் கூட்டம் குறையாமல் திரையரங்குகளை ஹவுஸ் புல்லாக வைத்துள்ளது.மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. சங்கராந்தி விழாவை முன்னிட்டு ‘வாரசுடு’ என்ற பெயரில் வாரிசு திரைப்படம் தெலுங்கு மொழியில் டப் செய்யபட்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. தாயரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பேராதரவோடு வெளியான வாரிசு தற்போது வசூல்களை குவித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது வருகிறது. முன்னதாக வட அமெரிக்கா பகுதிகளில் வாரிசு திரைப்படம் வெளியாகி 1.2 மில்லியன் டாலர் வசூலையும் UK வில் 669412 பவுண்டுகளை குவித்திருந்தது மேலும் விடுமுறை நாளை வாரிசு திரைப்படம் மூலம் ரசிகர்களும் பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர் .உலகெங்கும் வசூல் குவித்து வரும் வாரிசு திரைப்படம் ஐந்தே நாளில் உலகளவில் 150 கோடி ரூபாயை எட்டியது. இதனையடுத்து ரசிகர்கள் அதிகாரப் பூர்வ அறிவிப்பை பகிர்ந்து வைரலாக்கினர்.

மேலும் இந்நிலையில் ஏழு நாட்களை கடந்த தளபதி விஜயின் வாரிசு உலகளவில் 210 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வெளிவந்துள்ள மிகப்பெரிய படமாக வாரிசு இருந்து வருகிறது. தளபதி விஜயின் 'மெர்சல்', 'சர்க்கார்', 'பிகில்', 'மாஸ்டர்', 'பீஸ்ட்' திரைப்படங்களை தொடர்ந்து 200கோடி ரூபாய் வசூலித்த திரைப்படங்கள் பட்டியலில் வாரிசு திரைப்படமும் இணைந்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் இதை பகிர்ந்து வருகின்றனர். உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றும் வரும் வாரிசு திரைப்படம் விரைவில் 300 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடோடி மன்னனாக தனுஷ் – வாத்தி இரண்டாவது பாடலில் surprise entry கொடுத்த ஜிவி பிரகாஷ்.. வைரலாகி வரும் பாடல் இதோ..
சினிமா

நாடோடி மன்னனாக தனுஷ் – வாத்தி இரண்டாவது பாடலில் surprise entry கொடுத்த ஜிவி பிரகாஷ்.. வைரலாகி வரும் பாடல் இதோ..

வாரிசு பாக்க இந்தி சீரியல் மாதிரி இருக்கு? – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி
சினிமா

வாரிசு பாக்க இந்தி சீரியல் மாதிரி இருக்கு? – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி

RRR படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்.. ராஜமௌலியிடம் கூறியது என்ன? - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

RRR படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்.. ராஜமௌலியிடம் கூறியது என்ன? - வைரலாகும் வீடியோ இதோ..