முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி - ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ..

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ரன் பேபி ரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - run baby run to hit the screen on this date | Galatta

தமிழ் சினிமாவில் சமகால பிரபலங்களில் ஒருவர் ஆர்.ஜே.பாலாஜி.‌ வருடம் முழுவதும் திரைப்படங்கள் மூலமாகவும் கிரிக்கெட் கமெண்ட்ரி மூலமாகவும் இணையதளம் முலமாகவும் தன் இருப்பை காட்டி கொண்டு இருப்பவர். ரேடியோவில் ஆர்.ஜே வாக பணியாற்றி புகழ்பெற்றவர் ஆர்.ஜே பாலாஜி. பின் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இயக்குனர் மணிரத்னம் படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது என்கவுண்டர் ஜோக்குகளுக்கும் தொடர் பேச்சு திறனுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனைதொடர்ந்து  ஆர் ஜே பாலாஜி ‘எல்.கே.ஜி’ திரைப்படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பெரும் வரவேற்பு முதல் படத்திலே கிடைத்த நிலையில் காமெடியனாக நடிப்பதை கைவிட்டுவிட்டு நகைச்சுவை கலந்த கதைகளில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்.

எல்.கே.ஜி திரைப்படத்தையடுத்து நயன்தாராவுடன் இணைந்து 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்தார். அதில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணியாற்றினார். அதன்பின் இந்தியில் வெளிவந்து மெகாஹிட் அடித்த 'பாதகி ஹோ' திரைப்படத்தை தமிழில் ’வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் இயக்கி நடித்தார்.தொடர்ந்து இவர் நடித்த மூன்று படங்களும் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்றது. நல்ல நகைச்சுவையுடன் சமூக கருத்தை நேர்த்தியாக கையாளும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் ஆர்.ஜே.பாலாஜி திரைப்படங்களுக்கு தனி ரசிகர் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜியின் அடுத்த படமான 'ரன் பேபி ரன்' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் படத்தின்‌ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.வரும் பிப்ரவரி மாதம் 3 ம் தேதி ரன் பேபி ரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது இதனையடுத்து ரசிகர்கள் அறிவிப்பை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#RunBabyRun in theatres from February 3rd !!! 🖤 pic.twitter.com/eNi50BW59j

— RJ Balaji (@RJ_Balaji) January 17, 2023

முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கவுள்ளதால் தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வழக்கமான நகைச்சுவைடிராக்கிலிருந்து விலகி ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ராதிகா சரத்குமார்,இஷா தல்வார்,ஸ்மிருதி வெங்கட்,விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் பின்னணி இசை படக் காட்சிகளுடன் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்று ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி ’சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடோடி மன்னனாக தனுஷ் – வாத்தி இரண்டாவது பாடலில் surprise entry கொடுத்த ஜிவி பிரகாஷ்.. வைரலாகி வரும் பாடல் இதோ..
சினிமா

நாடோடி மன்னனாக தனுஷ் – வாத்தி இரண்டாவது பாடலில் surprise entry கொடுத்த ஜிவி பிரகாஷ்.. வைரலாகி வரும் பாடல் இதோ..

வாரிசு பாக்க இந்தி சீரியல் மாதிரி இருக்கு? – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி
சினிமா

வாரிசு பாக்க இந்தி சீரியல் மாதிரி இருக்கு? – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி

RRR படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்.. ராஜமௌலியிடம் கூறியது என்ன? - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

RRR படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்.. ராஜமௌலியிடம் கூறியது என்ன? - வைரலாகும் வீடியோ இதோ..