‘இது எப்படி இருக்கு..’ - ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்.. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை களமிறக்கும் நெல்சன்

புஷ்பா படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர் - Pushpa Actor Sunil joins the cast of rajinikanth jailer | Galatta

இந்திய சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை வைத்திருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் உடன் இணைந்து ‘ஜெயிலர்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்து வருகிறார். படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் Glimpse இணையத்தை கலக்கி டிரண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் விநாயகன், ‘ராக்கி’ படப்புகழ் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  மேலும் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால் நடிக்கவிருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது இதனையடுத்து இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு.

இந்நிலையில் ரஜினி உட்பட மூன்று சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றனர், மேலும் படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் அவர்களை களம் இறக்கியுள்ளது ஜெயிலர் படக்குழு. சுனில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளதை அதிகாரப் பூர்வமாக சன் பிக்சர் தனது வலைதளத்தில் பதிவேற்றியுள்ளது. இதனையடுத்து இந்த அறிவிப்பு உடனடியாக வைரலாகி வருகிறது.

.@mee_sunil from the sets of #Jailer @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/JJBfQw91QH

— Sun Pictures (@sunpictures) January 17, 2023

நடிகர் சுனில் சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் மூலம் பரவலாக அறியப்பட்டவர். தெலுங்கு துறையில் பிரபல நகைச்சுவை நடிகராக நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பான் இந்திய படமான புஷ்பா படம் மூலம் இந்தியளவு பிரபலமடைந்தார். இதனையடுத்து நடிகர் சுனில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் மாவீரன் படத்திலும், நடிகர் கார்த்தி, இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் உருவாகி வரும் ஜப்பான் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து இந்திய மொழிகளில் உச்சம் பெற்ற நடிகர்கள் ஜெயிலர் படத்தில் இடம் பெறுவதால் நாளுக்கு நாள் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இயக்குனர் நெல்சன் ‘டாக்டர்’ படம் மூலம் கவனம் பெற்றிருந்தாலும் அவரது முந்தைய படமான விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் ரஜினி நடித்த முந்தைய படங்களான ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் ன் மார்கெட்டை உயர வழிவகுக்குமா? இயக்குனர் நெல்சன் தனது வெற்றியை இந்த படத்தில் உறுதி செய்வாரா? என்பதை படத்தின் வெளியீட்டுக்கு பின்பே தெரியவரும்.

RRR படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்.. ராஜமௌலியிடம் கூறியது என்ன? - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

RRR படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்.. ராஜமௌலியிடம் கூறியது என்ன? - வைரலாகும் வீடியோ இதோ..

அஜித் திரைப்பயணத்தில் இதுவே முதல் முறை – வசூல் சாதனை படைத்த துணிவு.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

அஜித் திரைப்பயணத்தில் இதுவே முதல் முறை – வசூல் சாதனை படைத்த துணிவு.. வைரலாகும் பதிவு இதோ..

செம்மையான செய்கை ரெடி.. – எஸ்.ஜே.சூர்யா கொடுத்த ஜிகர்தண்டா அப்டேட் இதோ..
சினிமா

செம்மையான செய்கை ரெடி.. – எஸ்.ஜே.சூர்யா கொடுத்த ஜிகர்தண்டா அப்டேட் இதோ..