வாரிசு பாக்க இந்தி சீரியல் மாதிரி இருக்கு? – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி

விஜயின் வாரிசு படத்தின் ஒளிப்பதிவாளர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் இதோ - Varisu cinematographer karthick palani explain the criticize | Galatta

பொங்கலையொட்டி கோலாகல கொண்டாட்டங்களுடன் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலகெங்கிலும் பல இடங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் தளபதி விஜய் உடன் பணியாற்றிய அனுபவத்தையும் நமது கலாட்டா மீடியாவிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் வாரிசு படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி.

அதில், வாரிசு படம் பார்க்க இந்தி சீரியல் மாதிரி உள்ளது என்ற விமர்சனத்திற்கு, அவர்,

“வெறும் டிரைலர் மட்டும் வெச்சு எப்படி அந்த எண்ணத்திற்கு அவர்கள் போனார்கள் என்று தெரியவில்லை. முன்னாடியே படம் குறித்த அந்த அனுமானம் தான் இதற்கு காரணமாக இருக்கும். படத்தை முழுக்க பார்க்காமல் இப்படி சொல்ல முடியாது. இப்போ படம் வெளியானதையடுத்து ‘படம் பார்க்க நல்ல இருக்கு..’ ‘விஜய் அண்ணாவ cute அ காட்டிருக்கிங்க..’ போன்ற  நிறைய positive கருத்துகள் வருது.. பாதி சமைச்சிட்டு இருக்கும் போது உள்ள வந்து இந்த சமையல் நல்ல இல்லனா எப்படி..  முழுசா பரிமாறி சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.. நல்லாருக்குன்னு சொன்னா ok, நநல்லா இல்லன்னு சொன்னாலும் ok.. முழு படம் பார்த்தா வேற மாதிரி  feel கொடுக்கும். உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாலும் நாங்க அத ஏத்துப்போம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் வாரிசு படத்தின் இடைவெளி குறித்த கேள்விக்கு, “இயக்குனர் வம்சி இடைவெளி குறித்து முன்பே தெளிவாக இருந்தார். ஏனென்றால் படத்தின் கதையை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு போகும் காட்சி. அந்த காட்சியை முன்பே திட்டமிட்டு இருந்தோம். அந்த காட்சி எடுத்த பின் படபிடிப்பு தளத்திலே அந்த காட்சியை edit செய்தோம். பின் விஜய் சாருக்கு காட்டியதும் விஜய் சார் படபிடிப்பு தளத்தில் என்னை சந்தித்து ‘நல்லாருக்குலே.. உங்களுக்கு பிடிச்சிருக்கு ல..’ நானும் எனக்கு பிடிச்சது என்று சொன்னதும் ‘அப்போ ok என்றார்.” என்று குறிப்பிட்டார்.  

தயாரிப்பாளர் தில் ராஜு வின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி விஜய் நடித்து வெளிவந்த வாரிசு திரைப்படம் ஆறு நாட்களை கடந்து உலகெங்கிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்து வருகிறது. மேலும் 6 நாட்களை கடந்த வாரிசு திரைப்படம் உலகெங்கிலும் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.  விடுமுறை நாளையொட்டி வெளியான வாரிசு இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் என்ற நிலையில் தான் உள்ளது.

குடும்பங்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி வாரிசு திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

 

செம்மையான செய்கை ரெடி.. – எஸ்.ஜே.சூர்யா கொடுத்த ஜிகர்தண்டா அப்டேட் இதோ..
சினிமா

செம்மையான செய்கை ரெடி.. – எஸ்.ஜே.சூர்யா கொடுத்த ஜிகர்தண்டா அப்டேட் இதோ..

பொங்கலுக்கு இடையில இப்படி ஒரு பண்டிகையா? – 15 புது படங்களின் அதிரடி ரிலீஸ் அறிவிப்புகளை வெளியிட்ட Netflix!
சினிமா ஸ்பெஷல்ஸ்

பொங்கலுக்கு இடையில இப்படி ஒரு பண்டிகையா? – 15 புது படங்களின் அதிரடி ரிலீஸ் அறிவிப்புகளை வெளியிட்ட Netflix!

 ‘Super Cop மைக்கேல்’ - ஃபர்ஸி இந்தி தொடர் சார்பில் வெளியிடப்பட்ட விஜய் சேதுபதி Birthday Special Glimpse இதோ..
சினிமா

‘Super Cop மைக்கேல்’ - ஃபர்ஸி இந்தி தொடர் சார்பில் வெளியிடப்பட்ட விஜய் சேதுபதி Birthday Special Glimpse இதோ..