தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி.20 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும்,விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இந்த தொடர்களில் நடித்து பலரும் தங்களுக்கென ரசிகர் பட்டாளங்கள் உருவாகும் அப்படி பலரும் நட்சத்திரங்களாக அவதரித்துள்ளனர்.

விஜய் டிவி சீரியல் குடும்பத்தில் புதிதாக இணையவுள்ள ஒரு சீரியல் செல்லம்மா.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.அம்மா மகள் இடையேயான இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்