உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதுவரை இல்லாத அளவில் இந்த முறை பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியின்  போட்டியாளர்களாக பிரியங்கா தேஷ்பாண்டே,இசைவாணி,ராஜு ஜெயமோகன்,மதுமிதா,அபிஷேக் ராஜ,நமிதா மாரிமுத்து,பாவனி ரெட்டி,நதியா சங்,வருண்,இமான் அண்ணாச்சி,ஐக்கி பெர்ரி,சுருதி ஜெயதேவன்,அபிநய் வட்டி,அக்ஷரா ரெட்டி,தாமரைச்செல்வி,சின்ன பொண்ணு,சிபி சந்திரன்,நிரூப் நந்தகுமார் ஆகியோர் களமிறங்கியுள்ளர்

இதில் இன்று(அக்டோபர் 4) ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான ப்ரோமோவில் முதல் வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் நிகழ்வும் அதில் பிரியங்கா பேசிய பன்ச் வசனமும் கலகலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியான அடுத்த புரோமோவும் அதை தொடர்கிறது.

இந்த புதிய ப்ரோமோவில் நடிகர் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் வீட்டிற்கான விதிகளை வாசிக்கிறார். பிக் பாஸ் ரூல்ஸ் புத்தகத்தை வாசிக்கும் ராஜு ஜெயமோகன் படிக்க படிக்க சற்று வார்த்தைகள்  தடுமாற பிக்பாஸ் வீட்டில் சிரிப்பு சத்தம் தொடர்கிறது. இதுவே தொடருமா?? அனல் பறக்கும் பேச்சுக்கள் எப்போது ஆரம்பமாகும் என ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகர்கள் என  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 9:30 மணிக்கும் விஜய் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது பிக்பாஸ் 5.