வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் மது போதையில் 2 சிறுவர்கள் உல்லாசமாக இருந்த நிலையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடாக மாநிலத்தில் தான் வயதிற்கு மீறிய இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடாக மாநிலம் மங்களூரு அருகே உள்ள தட்சிண கன்னடா மாவட்டம் பஜ்பே போலீஸ் எல்லைக்கு உட்பட்டது குருபரா சிலிம்பி குட்டே வனப்பகுதி அமைந்து உள்ளது. 

இந்த வனப்பகுதியில் நேற்றைய தினம் 16 வயது உள்ள 2 மைனர் பெண்கள் மற்றும் 17 வயது நிரம்பிய 2 சிறுவர்களுடன் அளவுக்கு மீறிய கடுமையான போதை மயக்கத்தில் ஒன்றாக இருந்து உள்ளனர்.

இந்த தகவல், அந்த பகுதியைச் சேர்ந்த பஜ்ரங்தள அமைப்பினருக்குத் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக இது குறித்து அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு செம போதையில் இருந்த அந்த 2 மைனர் பெண்கள் மற்றும் அவர்களுடன் இருந்த 2 சிறுவர்களையும் பிடித்து விசாரித்து உள்ளனர்.

இந்த விசாரணையில், அந்த 2 சிறுவர்களும் போதையில் இருந்ததும், அவர்கள் அந்த மைனர் பெண்களின் காதலர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

அத்துடன், அந்த சிறுவர்கள் இருவரும், அந்த இரு மைனர் பெண்களை வனப்பகுதிக்கு அழைத்து வந்து மது குடித்துவிட்டு தனிமையில் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த இரு மைனர் பெண்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர், பஜ்பே காவல் நிலையத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து, போலீசார் அந்த மைனர் பெண்களுக்கு அறிவுரை கூறி, அவர்களை எச்சரித்தும், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

அதே நேரத்தில், அந்த இரு மைனர் பெண்களின் காதலர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்தனர். 

மேலும், அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.