“தன்னுடைய மனைவியை வெறும் 500 ரூபாய்க்காக, அடுத்தவர்களுடன் உல்லாசத்துக்கு கணவனே அனுப்பிய” சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் 21 வயதான இளம் பெண் ஒருவர், சமீபத்தில் அங்குள்ள மவு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், போக போக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

அந்த நேரத்தில், அந்த பெண்ணின் கணவருக்கு சரியான வேலை இல்லாத நிலையில், கணவன் - மனைவி இருவருமே குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு உள்ளனர்.

அத்துடன், கணவருக்கு வேலை கிடைக்காத போதிலும், அவர் குடிப் பழக்கத்திற்கு மிகவும் அடிமையாகி உள்ளார். வேலை இல்லாத போதிலும், குடிப்பதற்கு மட்டும் அவருக்குத் தினமும் பணம் தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது. 

ஒரு கட்டத்தில் கையில் சுத்தமாகப் பணம் இல்லாமல் தவித்த அந்த கணவன், வேறு வழியில்லாமல் தன்னுடைய நண்பனிடம் வெறும் 500 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, தன்னுடைய மனைவியை நண்பர் சோனு சர்மாவோடு பாலியல் உறவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

இந்த விசயத்தை, அந்த கணவன் தனது கூட்டாளி சோனு சர்மாவிடம் கூறவே, அவரும் சரி என்று கூறிவிட்டு, அந்த கணவரிடம் 500 ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். 

கூட்டாளியிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த கணவன், கடந்த 30 ஆம் தேதி வியாழக் கிழமை இரவு 9 மணி அளவில் தனது மனைவியை அங்குள்ள லக்கி ஹோட்டலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 

அதன் பிறகு, அங்கு வந்த கணவனின் நண்பன் சோனு, அந்த பெண்ணை கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், வீடு திரும்பியதும் தனது கணவனிடம் சண்டைக்குச் சென்று உள்ளார். அப்போது, கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, தனது கணவன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.