தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராகவும், தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் 2022 ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி வெளியாகும் RRR திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளதில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் பீம்லா நாயக், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

அந்தவகையில் ஆயுதபூஜை வெளியீடாக வருகிறது இயக்குனர் சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் வினோதய சித்தம் திரைப்படம். இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி,முனீஸ்காந்த்,ஜெயப்பிரகாஷ்,இயக்குனர் பாலாஜி மோகன்,ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள வினோதய சித்தம் படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் ரிலீஸாகும் வினோதய சித்தம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. சமுத்திரகனியின் விறுவிறுப்பான வினோதய சித்தம் படத்தின் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.