“மாமனாரோடு பாலியல் உறவு கொள்ள தனது மனைவிக்கு கணவன் உட்பட 5 பேர் சேர்ந்து தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடாக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வரும் 29 வயது இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த இளம் பெண், அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 

இப்படியான சூழ்நிலையில், இளம் பெண்ணின் பெற்றோர் தங்களது மகளுக்கு, அங்குள்ள ஞானபாரதி பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டிற்கு சென்ற அந்த பெண் இன்ஜினீயர், கணவருடன் மகிழ்ச்சியாகவே வசித்து வந்தார்.

இந்த சூழலில் தான், கடந்த சில மாதங்களாகப் பெண் இன்ஜினீயரின் கணவன் தீபக், அவரது தந்தை கெம்பனராசிமய்யா, தீபக்கின் சகோதரர் ரக்‌ஷக், சகோதரி அனிதா, தீபக்கின் அத்தை ஹேமா ஆகியோர் அந்த பெண்ணிடம் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படியாக, கணவர் வீட்டில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து கொடுமைப்படுத்திய போதிலும், தனது வீட்டிற்கு சென்று கூடுதல் வரதட்சணை வாங்கி வர அவர் விடப்பிடியாக மறுத்து விட்டார்.

இப்படியான சூழலில் தான், தீபக்கின் தந்தை கெம்பனராசிமய்யா, தனது மருமகளான பெண் இன்ஜினியரிடம் தவறாக நடக்க  முயற்சித்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இன்ஜினீயர், இது பற்றி தனது கணவன் தீபக்கிடம் கூறி அழுதுள்ளார். 

இதனை எதார்த்தமாகக் கேட்டுக்கொண்ட அவரது கணவன் தீபக், அதற்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், “எனது தந்தை உடன் மட்டுமல்லாமல், மேலும் எனது சில நண்பர்களிடமும் நீ பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று, அவர் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இன்ஜினீயர், தனது கணவனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது, தனது மனைவியிடம், “உனது கன்னி தன்மையை நான் சோதிக்க வேண்டும்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், கணவனை முற்றிலுமாக வெறுத்துவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறிய அந்த பெண், தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.