தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த திருட்டுப்பயலே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானது. தொடர்ந்து  சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மாற்றான், அனேகன், தனி ஒருவன் கவண் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது.

கடைசியாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் நாய் சேகர். பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி இணைந்து நடித்துள்ள முழு நீள நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கிறது நாய் சேகர் . 

இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கனதன். இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி ஜெயம் ரவி நடித்து வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சூப்பர்ஹிட் ஆனது.

அடுத்ததாக இயக்குனர் பிரதீப் ரங்கனதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 22வது திரைப்படமாக தயாராகும் புதிய திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.