தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி, ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்தடுத்து நடிகர் மாதவனுடன் ரன்,அஜீத் குமாருடன் இணைந்து ஜி, விஷாலுடன் சண்டக்கோழி, சீயான் விக்ரமுடன் பீமா, நடிகர் கார்த்தியின் பையா, நடிகர் மாதவன் & ஆர்யா இணைந்து நடித்த வேட்டை என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் மற்றும் நடிகர் விஷால் நடித்த  சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அடுத்ததாக புதிய திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் புதிய #RAPO19 திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க, பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார்.ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். 

பரபரப்பாக RAPO19 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ராம் பொத்தினேனி தனது கதாபாத்திரத்திற்காக கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். மிக கடினமாக உடற்பயிற்சி செய்ததில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதை தெரிவித்திருக்கிறார். நடிகர் ராம் பொத்தினேனி விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.