கேப்டன் தேர்வு-பிரியங்கா பன்ச்!-பிக்பாஸ் 5 கல கல முதல் ப்ரோமோ இதோ!!
By Anand S | Galatta | October 04, 2021 12:44 PM IST
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்தமுறை 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர் பிரியங்கா, பாடகி சின்னப்பொண்ணு, பாடகி இசைவாணி, மதுமிதா, யூ ட்யூபர் அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பாவனி ரெட்டி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, நதியா சங், வருண், அபிநய் வட்டி, அக்ஷரா ரெட்டி, தாமரைச்செல்வி, சிபி சந்திரன், நிருப் நந்தகுமார் ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்
இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியானது. இந்த வார கேப்டனை தேர்வு செய்யும் நிகழ்வில் கேப்டன் தேர்வில் விருப்பமுள்ள போட்டியாளர்கள் முன்வர பிக் பாஸ் அழைக்க, ராஜு ஜெயமோகன், நமிதா மாரிமுத்து, பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு மற்றும் நிரூப் நந்தகுமார் ஆகியோர் முன்வந்தனர்.
ஒவ்வொருவரும் எந்த அணிக்கான கேப்டனாக இருக்க விரும்புகிறீர்கள் என பிக்பாஸ் கேட்க நடிகர் ராஜு ஜெயமோகன்," நான் பாத்ரூம் சுத்தம் பண்ற டீம்க்கு..." என சொல்ல, பிரியங்கா, "நாங்கெல்லாம் ஒன்னானோம் கக்கூஸ் கழுவி ஃபிரண்டானோம்" என பன்ச் பேச பிக்பாஸ் வீடு கலகலப்பானது. பிரியங்கா கலகலப்பான பன்ச் பேசும் பிக்பாஸ் 5 புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் யார்?? மற்ற அணிகளின் கேப்டன்கள் யார்? யார்? என்பது அடுத்தடுத்த ப்ரோமோக்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.