விஜய் சேதுபதியை Impress செய்த பிரபல நகைச்சுவை கலைஞர் - அட்டகாசமான Surprise Gift.. வைரல் பதிவு இதோ..

பிரபல மிமிக்ரி கலைஞரை பாராட்டிய விஜய் சேதுபதி - mimicry artist TSK meets Vijay Sethupathi for Farzi | Galatta

தமிழ் சினிமாவில் நடிப்பிற்காக நாளுக்கு நாள் மெருகேற்றி அர்பணித்து வரும் சமகால நடிகர்களின் மிக முக்கியமானவர் விஜய் சேதுபதி. அட்டகாசமான நடிப்பின் மூலம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கவனம் பெற்று தென்னிந்தியாவின் முக்கிய நடிகராக தற்போது வளர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. இவர் தற்போது  தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் வரும் மார்ச் 30 ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிசாசு 2' படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறந்த விஜய் சேதுபதி தற்போது இந்தியில் அடியெடுத்து வைத்துள்ளார். அதன் படி விஜய் சேதுபதி கத்ரீனா கைப் உடன் ‘மெரி கிறிஸ்மஸ்படத்திலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்திலும் மாநகரம் படத்தில் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் 'மும்பைக்கர்' படத்திலும் நடித்து வருகிறார்.

அதன்படி தற்போது விஜய் சேதுபதி, பிரபல வெற்றி தொடரான 'பேமிலி மேன்' தொடரை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்த 'ஃபர்ஸி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது ஃபர்ஸி தொடர்.

அதிரடி ஆக்ஷன் போலீசாக ஃபர்ஸி தொடரில் நடித்துள்ள விஜய் சேதுபதி இந்தியில் தனது சொந்த குரலில் டப் செய்துள்ளார். நேரம் இல்லாத காரணத்தினால் தமிழில் டப் செய்ய முடியாமல் போனது. அதனால் பிரபல நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான TSK தமிழ் ஃபர்ஸி தொடரில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்துள்ளார். கச்சிதமாக விஜய் சேதுபதியின் குரலை பேசியுள்ள TSK விற்கு ரசிகர்கள் திரைபிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர்.

director vetri maaran met vck party leader thirumavalavanஇந்நிலையில் நேற்று விஜய் சேதுபதி TSK வை நேரில் சந்தித்து தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி TSK கண்ணத்தில் முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதி TSK நாட்குறிப்பில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அதில்,

உன்னை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி.. உன்னுடைய Dubbing in Farzi’ மிக அருமை.. வாழ்க நீ..உன்னுடைய அறிவும், பண்பும், திறமையும் உன்னை மேன்மேலும் வளர்க்கும்.. நீ நினைக்கும் இடத்தை அடைவாய்.. வாழ்த்துகள்.”  என்று குறிப்பிட்டிருந்தார்.

director vetri maaran met vck party leader thirumavalavan

இதனை TSK தனது  சமூக வலைதளத்தில், “இதுதான்  Life time settlement டா தருணம்.. உங்கள் பாராட்டிற்கும் அரவணைப்பிற்கும் வார்த்தைக்கும் மிக்க நன்றி விஜய் சேதுபதி அண்ணா. ஃபர்ஸி டப்பிங் மிகச்சிறப்பான அனுபவம் எனது நாட்குறிப்பில் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி..”  என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து TSK பதிவு இணையத்தில் தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ளது. மேலும் TSK வை ரசிகர்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர்.

That life time settlement da moment 🔥 Thanks for ur time and ur hug , appreciations , Positive words @VijaySethuOffl anna ❤️#farzi dubbing was a great experience anna ❤️ Love you so much for words on my diary ❤️Thanks @sekarprofficial sir @rajndk sir @PrimeVideoIN pic.twitter.com/yIU1RZO3It

— TSK (@tsk_actor) February 21, 2023

“தனுஷ் கிடைக்க திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும்..” வாத்தி திரைப்படத்தை புகழ்ந்த இயக்குனர் பாரதிராஜா -  வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“தனுஷ் கிடைக்க திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும்..” வாத்தி திரைப்படத்தை புகழ்ந்த இயக்குனர் பாரதிராஜா - வைரலாகும் வீடியோ இதோ..

Pan India Releases: அடுத்தடுத்த வசூல் வேட்டைக்கு தயாராகும் பான் இந்திய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

Pan India Releases: அடுத்தடுத்த வசூல் வேட்டைக்கு தயாராகும் பான் இந்திய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..

பக்கா திரில்லர் ரெடி..  ‘No Entry’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் ஆண்ட்ரியா.. - பிரபல நடிகர் வெளியிட்ட டிரைலர் இதோ..
சினிமா

பக்கா திரில்லர் ரெடி.. ‘No Entry’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் ஆண்ட்ரியா.. - பிரபல நடிகர் வெளியிட்ட டிரைலர் இதோ..