பா ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் - யார் இந்த பிரபலம்.. விவரம் உள்ளே..

தங்கலான் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் - Hollywood actor Daniel Caltagirone joins Pa Ranjith Thangalaan | Galatta

எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் தமிழ் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க சுரங்கம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சில ஷெட்டியுல்களை முடித்த இயக்குனர் பா ரஞ்சித் தற்போது புதிய ஷெட்டியுலில்  தீவிரம் காட்டி வருகிறார். வரு, மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த ஷெட்டியுல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பிற்காக விக்ரம் இணைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை தனது சமூக தளத்தில் பதிவேற்றினார் அதனை தொடர்ந்து அந்த புகைப்படங்கள் வைரலானது.

ஏற்கனவே படத்தில் சியான் விக்ரம் உடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் தங்கலான் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை புகைப்படத்துடன் பகிர்ந்தது நீலம் தயாரிப்பு நிறுவனம். டேனியல் கால்டகிரோன், தி பீச், தி பியானிஸ்ட், லாரா கிராப்ட் டாம்ப் ரைடர் ஆகிய புகழ்பெற்ற படங்களில் நடித்தவராவர். பிரபல ஆங்கில நிகழ்சிகளிலும் படங்களிலும் புகழ் பெற்றவர் டேனியல் கால்டகிரோன். இவர் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் வெனீஸ் தேசிய விருதினை சிறந்த திரைத்துறை பங்களிப்பிற்காக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கலான் படத்தில் இவர் இணைந்ததையடுத்து படத்தின் கதாநாயகன் சியான் விக்ரம் தங்கலான் படப்பிடிப்பு தளத்திற்கும் சமூக வலைதளத்திற்கும் உங்களை வரவேற்கிறேன் வேட்டை மனிதா!” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அப்பதிவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

Welcoming the huntsman🔪@DanCaltagirone to the sets of #Thangalaan and social media✨@Thangalaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam pic.twitter.com/sJfr9EnpNz

— Vikram (@chiyaan) February 21, 2023

அந்த பதிவை டேனியல் கால்டகிரோன் பகிர்ந்து அதனுடன், 

"நன்றி சியான். பிரம்மாண்டமான படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நாளை புத்துணர்ச்சியுடன் சீக்கிரம் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Thank you #Chiyaan! Happy to be a part of this amazing production 🥰

See you on the set tomorrow. Bright and early https://t.co/XZonifM59h

— Daniel Caltagirone (@DanCaltagirone) February 21, 2023

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடைபெறும் இப்படத்தயை பா ரஞ்சித் உடன் இணைந்து எழுதியுள்ளார் எழுத்தாளர் தமிழ் பிரபா. ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். 

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு - வைரலாகி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..
சினிமா

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு - வைரலாகி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

நீண்ட காத்திருப்புக்குப் பின் வந்த பிரபுதேவாவின் அதிரடி பட ரிலீஸ் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

நீண்ட காத்திருப்புக்குப் பின் வந்த பிரபுதேவாவின் அதிரடி பட ரிலீஸ் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் 'Project K' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு - வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் 'Project K' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு - வைரலாகும் அப்டேட் இதோ..