‘டாடா’ படத்தை பார்த்து விட்டு தனுஷ் பண்ண போன் கால்.. நெகிழ்ச்சியில் கவின்.. - ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

டாடா படத்தை பார்த்து கவினை பாராட்டிய தனுஷ் -  Actor Dhanush appreciate kavin for dada movie | Galatta

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் சின்னத்திரை நடிகருமான கவின் ஆச்சர்யப்படுத்தும் வகையில் ரசிகர்களை தனக்கு தக்க வைத்து இருந்தார். அதன் படி அவரது முதல் படம் லிப்ட் கடந்த 2021 ஆண்டில் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றது.அப்படத்தை தொடர்ந்து கவின் ஒரு கதாநாயகனாய்  தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்படி தற்போது அவர் நடித்த தனது இரண்டாவது படமான டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. கவின் நடிப்பில் முதல்முதலில் திரையரங்குகளில் வெளியாகும் படம் என்பதால் ஒரு தனி எதிர்பார்ப்பு முதலில் எழுந்தது. அதனைதொடர்ந்து படத்தின் பாடல்கள், டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தமிழகமெங்கும் வெளியான டாடா படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். படம் வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களே எழுந்தது. பிப்ரவரி 10 ம் வெளியான டாடா படத்திற்கு இன்று வரை மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகின்றனர். மேலும் ரசிகர்கள் திரைபிரபலங்கள் படம் குறித்து பாராட்டுகளையும் கவின் நடிப்பை குறிப்பிட்டும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷ் டாடா படத்தை பார்த்து கவினுக்கு தொலைபேசி மூலம் அழைத்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதை நடிகர் கவின் தனது சமூக வலைத்தளத்தில் எழுத்து வடிவில் சேர்த்து அதனுடன் நன்றியை தெரிவித்து உள்ளார். அதில்,

“ஹாய் கவின் நான் தனுஷ் பேசுகிறேன்..

நான் கேட்டது உண்மைதானா என்று அறியவே எனக்கு சிலநேரமானது. அந்த வியப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. டாடா படத்தை பார்த்துவிட்டு தனுஷ் சார் எனக்கு கால் செய்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உங்களின் படங்களை, உங்கள் திறமையை நான் திரையரங்குகளில் பார்த்து வியந்திருக்கிறேன். இன்று உங்களிடமிருந்து வந்த அழைப்பு வெறும் நன்றி தெரிவித்து ஈடு செய்திட முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களை பாராட்டுவதற்காக உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களின் ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துகள். உங்களின் எதிர்கால படைப்புகளை பார்க்க காத்திருக்கிறேன் சார்.” என்று கவின் குறிப்பிட்டு உள்ளார்.

A fine moment to cherish forever :)
Thanks a lot @dhanushkraja sir 🙏🏼♥️ pic.twitter.com/XDqI9HV1jh

— Kavin (@Kavin_m_0431) February 21, 2023

இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் மற்றும் கவின் ரசிகர்கள் அப்பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். தனுஷிடம் வந்த அழைப்பையடுத்து படக்குழுவினர்கள் தங்கள் மகிழ்ச்சியினை பதிவிட்டு வருகின்றனர்.

A call to remember 😊♥️
Thank you @dhanushkraja sir for making my day 🙏😊♥️ pic.twitter.com/iZy9bw9nzm

— Aparna Das (@aparnaDasss) February 21, 2023

மேலும் அவரை தொடர்ந்து டாடா பட கதாநாயகி அபர்ணா தாஸ் அவர்களை தனுஷ் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அபர்ணா தாஸ், அதில் “என்னால் இதை மறக்க முடியவில்லை. தனுஷ் சார் என்னை அழைத்து படம் குறித்து பேசினார் அவருக்கு படமும் எனது நடிப்பும் பிடித்ததாக தெரிவித்தார். படிக்காதவன், மயக்கம் என்ன, 3, மரியான், திருடா திருடி, யாரடி நீ மோகினி இதுபோன்ற எத்தனை படங்கள் என்றே எனக்கு தெரியவில்லை. நான் மிகப்பெரிய ரசிகை. நன்றி சார். வளரும் கலைஞர்களை பாராட்டுவதை கண்டு நான் நெகிழ்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கத்தில் இப்படத்தில் கவின் உடன் இணைந்து நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் டாடா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

பக்கா திரில்லர் ரெடி..  ‘No Entry’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் ஆண்ட்ரியா.. - பிரபல நடிகர் வெளியிட்ட டிரைலர் இதோ..
சினிமா

பக்கா திரில்லர் ரெடி.. ‘No Entry’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் ஆண்ட்ரியா.. - பிரபல நடிகர் வெளியிட்ட டிரைலர் இதோ..

“அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்..” மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.. வீடியோ இதோ..
சினிமா

“அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்..” மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.. வீடியோ இதோ..

மின்னல் முரளி கெட்டப்பில் அசத்தும் ஹிப் ஹாப் ஆதி.. வெளியானது 'வீரன்' படத்தின் First Look – அட்டகாசமான போஸ்டர் இதோ..
சினிமா

மின்னல் முரளி கெட்டப்பில் அசத்தும் ஹிப் ஹாப் ஆதி.. வெளியானது 'வீரன்' படத்தின் First Look – அட்டகாசமான போஸ்டர் இதோ..