விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வெற்றிமாறன்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

இணையத்தில் வைரலாகும் வெற்றிமாறன் திருமாவளவன் சந்திப்பு - Vetri maaran Thirumavalavan meeting photos goes viral | Galatta

கடந்த 2007 ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். மிகப்பெரிய கவனத்தை பெற்ற பொல்லாதவன் திரைப்படத்திற்கு பின்பு தொடர்ந்து தனுஷ் வைத்து படம் எடுக்க தொடங்கினார் இயக்குனர் வெற்றிமாறன்.  அதன்படி இதுவரை ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களை இயக்கினார். வமேலும் இடையே ‘விசாரணை’ படத்தை எடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன். இவரது அனைத்து படங்களுக்கும் வசூல் ஒருபுறம் விருதுகள் ஒருபுறம் என்று குவிந்து வந்தது ரசிகர்களிடம் வெற்றிமாறன் புகழ் ஓங்கி தனி ரசிகர் பட்டாளத்தையே இவருக்கு கொடுத்தது.

தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு என்று தமிழ் சினிமாவில் முக்கிய படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றி மாறன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளார் படக்குழுவினர். அதன்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வெளியாகவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட விடுதலை திரைப்படம் திண்டுகல் மலை பகுதியான சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப் பட்டது. தற்போது படத்திற்கான இறுதி கட்ட வேலை நடைபெற்றது. இதனிடையே இளையராஜா இசையில் விடுதலை படத்தின் முதல் பாடல் ‘உன்னோடு நடந்தா’ கடந்த 8ம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இயக்குனர் தோழர் #வெற்றிமாறன் அவர்கள் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தார்.#VCK#Thiruma pic.twitter.com/Pw8Qfm9hlN

— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 21, 2023

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை அம்பேத்கர் திடலில் சமீபத்தில் சந்தித்து உள்ளார். சமீபத்தில் விடுதலை படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த சந்திப்பு விழாவிற்கு திருமாவளவனை அழைப்பதாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்தகளை தெரிவித்து வருகின்றனர். உண்மையில் சந்திப்பின் காரணம் தெரியவில்லை என்றாலும் இந்த சந்திப்பு தொடர்பாக வெளியான புகைப்படங்களை தற்போது ரசிகர்கள்  இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். நிறைய இடங்களில் இயக்குனர் வெற்றிமாறன் திருமாவளவன் குறித்தும் அவரது செயல் குறித்தும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

actor dhanush surprise call to kavin after watching dada movieமேலும் வெற்றிமாறன் -  சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த அப்டேட் விடுதலை படம் வெளியானதும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pan India Releases: அடுத்தடுத்த வசூல் வேட்டைக்கு தயாராகும் பான் இந்திய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

Pan India Releases: அடுத்தடுத்த வசூல் வேட்டைக்கு தயாராகும் பான் இந்திய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..

பக்கா திரில்லர் ரெடி..  ‘No Entry’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் ஆண்ட்ரியா.. - பிரபல நடிகர் வெளியிட்ட டிரைலர் இதோ..
சினிமா

பக்கா திரில்லர் ரெடி.. ‘No Entry’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் ஆண்ட்ரியா.. - பிரபல நடிகர் வெளியிட்ட டிரைலர் இதோ..

“அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்..” மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.. வீடியோ இதோ..
சினிமா

“அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்..” மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.. வீடியோ இதோ..