"மலேசியாவில் மாஸ் காட்டிய விஜய்!"- ஷூட்டிங்கிற்கு முன்பே தளபதி68 இன்டர்நேஷனல் ப்ரோமோஷன் ஆரம்பம்! விவரம் இதோ

மலேசியாவில் விஜயின் தளபதி 68 பட பிரம்மாண்ட கட் அவுட்,vijay in thalapathy 68 huge banner erected in malaysia venkat prabhu | Galatta

“இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இப்படியா?” என அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் தளபதி விஜயின் மாஸ் மலேசியாவில் கொடி கட்டி பறக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கடந்த மே 21 ஆம் தேதி வெளிவந்த அதிரடி அறிவிப்பு தான் தளபதி 68. தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா என்டர்டெயினிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு முதல்முறையாக தளபதி விஜய் உடன் கைகோர்த்து இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய் உடன் கைகோர்த்துருக்கும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தளபதி 68 திரைப்படத்தை தயாரிக்கிறது. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த யுவன் சங்கர் ராஜா, விஜயின் 68-வது திரைப்படமாக தயாராகும் தளபதி 68 திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தளபதி 68 குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க அத்தனை அறிவிப்புகளும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மங்காத்தா திரைப்படத்தில் நடித்த அஜித்குமார் தளபதி 68 திரைப்படத்தில் கேமியோவாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் வெங்கட் பிரபு பதிலளித்திருந்தார். இருப்பினும் வழக்கமாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் இடம்பெறும் நட்சத்திரங்களில் இருந்து யாரெல்லாம் தளபதி 68 திரைப்படங்கள் இணைவார்கள் என்றும் வழக்கமாக வெங்கட் பிரபுவின் படங்களில் இடம்பெறும் டேக் லைனாக தளபதி 68 திரைப்படத்திற்கு என்ன டேக் லைன் இருக்கும் என்றும் பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

இந்த அத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் பதில் லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் இருக்கிறது. தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. எனவே அதன் பிறகு தான் தளபதி 68 திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவரும். இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே வெறும் அறிவிப்பு மட்டும் வெளிவந்த நிலையிலேயே மலேசியாவில் தளபதி 68 திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பு வந்ததிலிருந்து தளபதி 68 மீதான காய்ச்சலும் தொடங்கியது என தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தளபதி 68 காய்ச்சல் தொடங்கியது” என குறிப்பிட்டு மலேசியாவில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பிரம்மாண்ட கட் அவுட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

The fever has started 🔥🔥🔥#Malaysia @kalyana_devan@VisualRetale pic.twitter.com/Zmr4lUDzNB

— AGS Entertainment (@Ags_production) May 23, 2023

RRR பட வில்லன் நடிகர் திடீரென காலமானார்... எமோஷனலான SSராஜமௌலியின் இரங்கல் இதோ!
சினிமா

RRR பட வில்லன் நடிகர் திடீரென காலமானார்... எமோஷனலான SSராஜமௌலியின் இரங்கல் இதோ!

சினிமா

"இது ஈடுகட்ட முடியாத இழப்பு!"- சரத் பாபுவின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்... உருக்கமான பதிவு இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... ஷங்கர் - அனிருத்தின் எதிர்பாராத சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... ஷங்கர் - அனிருத்தின் எதிர்பாராத சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ