"இது ஈடுகட்ட முடியாத இழப்பு!"- சரத் பாபுவின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்... உருக்கமான பதிவு இதோ!

சரத்பாபுவின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்,rajinikanth pays his condolences to actor sarath babu demise | Galatta

தென்னிந்திய சினிமாவின் மகத்தான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் சரத்பாபு நேற்று மே 22 ஆம் தேதி காலமானார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத் பாபு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அவர் உயிரிழந்த செய்தி ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது மேலும் பல கோடி ரசிகர் பெருமக்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சரத் பாபு அவர்களின் நெருங்கிய நண்பரும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தெலுங்கில் நடிகராக அறிமுகமான நடிகர் சரத் பாபு கடந்த 1973 ஆம் ஆண்டு வெளிவந்த ராம ராஜியம் படத்தின் மூலம் தெலுங்கில் நடிகராக களமிறங்கினார். பின்னர் நடிகர் சரத் பாபு 1977 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப் பிரவேசம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, மரோ சரித்ரா உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு, இதுவரை தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1980 - 90களில் காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் சரத் பாபு நடித்துள்ளார்.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து சரத் பாபு நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முள்ளும் மலரும் திரைப்படத்தில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் சரத் பாபு நடித்திருந்தார். இப்படத்தில் ஜீப் ஓட்டியபடி சரத் பாபு நடித்த செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல் இன்று வரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட்டாக இருக்கிறது. அடுத்தடுத்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சரத் பாபு தொடர்ந்து  தமிழ் சினிமாவின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படங்களாகக கொண்டாடப்படும், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாமலை மற்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த முத்து ஆகிய திரைப்படங்களிலும் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்திருந்தார்.

கடந்த சில வாரங்களாகவே கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத் பாபு சிகிச்சை பலனின்றி தனது 72 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் அவரது மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர் அருமையான மனிதர் சரத் பாபுவை நான் இழந்து இருக்கிறேன்! இது ஈடுகட்ட முடியாத இழப்பு! அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என பதிவிட்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அந்த பதிவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன்.

இது ஈடுகட்ட முடியாத இழப்பு.

அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.#SarathBabu

— Rajinikanth (@rajinikanth) May 22, 2023

சினிமா

"விஜயின் தளபதி 68 பட அறிவிப்புக்கு பின் முதல் கொண்டாட்டம்!"- வெங்கட் பிரபுவிற்கு குவியும் வாழ்த்துகள்... வைரல் புகைப்படங்கள் இதோ!

விடுதலை படத்தையடுத்து கதையின் நாயகனாக சூரியின் அடுத்த படைப்பு... சிவகார்த்திகேயனுடன் இணைந்த புதிய பட அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

விடுதலை படத்தையடுத்து கதையின் நாயகனாக சூரியின் அடுத்த படைப்பு... சிவகார்த்திகேயனுடன் இணைந்த புதிய பட அட்டகாசமான அப்டேட் இதோ!

சினிமா

"தளபதி68-ல் விஜய் உடன் இணைகிறாரா அஜித்குமார்?"- வெங்கட் பிரபுவின் முதல் மாஸ் அப்டேட்... வைரல் வீடியோ இதோ!