உலகநாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... ஷங்கர் - அனிருத்தின் எதிர்பாராத சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

இந்தியன் 2 பட ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்,shankar shared a first video from indian 2 movie sets | Galatta

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியின் இந்தியன் 2 திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்று தற்போது வெளியானது. கலையின் மீது என்றும் தீரா கலை தாகத்தோடு 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் என்றும் குறையாத அதே வேகத்தோடு ஒட்டு மொத்த இந்திய திரையுலகிற்கும் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக தயாராகும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தனது 234 ஆவது திரைப்படமான KH234 படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்திற்கான திரைக்கதை வசனங்களையும் எழுதும் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பணிகளை தொடங்கினார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படம் கமல்ஹாசன் அவர்களுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக தடைபட்டது. பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடையும் நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.  இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திற்கான முதல் பாடல் கம்போசிங் வீடியோவை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேரவனுக்குள் இயக்குனர் ஷங்கருக்கு இசையமைப்பாளர் அனிருத் இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் ஒன்றை காண்பிப்பது போன்ற இந்த வீடியோவில், இடம்பெற்றிருக்கும் பாடலின் இசை கட்டாயமாக படத்தில் துள்ளளான நடனத்தோடு ஒரு ட்ரீட் காத்திருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாகவே ஷங்கர் திரைப்படங்கள் என்றால் பாடல்களில் நிறைய மேஜிக் இருக்கும் முதல் முறை அனிருத், ஷங்கருடன் இணைந்து இருப்பதால் இந்த புதிய மேஜிக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட இந்தியன் 2 படத்தின் அட்டகாசமான புதிய ஸ்பெஷல் வீடியோ இதோ…

 

 

View this post on Instagram

A post shared by Shankar Shanmugham (@shanmughamshankar)

விடுதலை படத்தையடுத்து கதையின் நாயகனாக சூரியின் அடுத்த படைப்பு... சிவகார்த்திகேயனுடன் இணைந்த புதிய பட அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

விடுதலை படத்தையடுத்து கதையின் நாயகனாக சூரியின் அடுத்த படைப்பு... சிவகார்த்திகேயனுடன் இணைந்த புதிய பட அட்டகாசமான அப்டேட் இதோ!

சினிமா

"தளபதி68-ல் விஜய் உடன் இணைகிறாரா அஜித்குமார்?"- வெங்கட் பிரபுவின் முதல் மாஸ் அப்டேட்... வைரல் வீடியோ இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன்-சிலம்பரசன்TR-தேசிங்கு பெரியசாமி அதிரடி கூட்டணியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன்-சிலம்பரசன்TR-தேசிங்கு பெரியசாமி அதிரடி கூட்டணியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!