RRR பட வில்லன் நடிகர் திடீரென காலமானார்... எமோஷனலான SSராஜமௌலியின் இரங்கல் இதோ!

RRR பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீரென காலமானார்,rrr actor ray stevenson passed away ss rajamouli pays his condolences | Galatta

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகவும் தெலுங்கில் இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து உலக அளவில் அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான RRR வில்லனாகவும் மிரட்டிய நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீரென காலமானார். கடந்த 1998 ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளிவந்த தியரி ஆஃப் ஃபைட் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ரே ஸ்டீவன்சன், தொடர்ந்து கிங் ஆத்தர் ,அவுட் போஸ்ட், பனிஷர்: வார் ஸோன் உள்ளிட்ட படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சிரிக் டூ ஃப்ரீக் தி வேம்பையர்'ஸ் அசிஸ்டன்ஸ் எனும் பேண்டஸி படத்திலும், தி புக் ஆப் எலி எனும் கேங்ஸ்டர் படத்திலும் ரே ஸ்டீவன்சன் நடித்திருக்கிறார். குறிப்பாக உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்ட மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் MCUன் மிக முக்கிய சூப்பர் ஹீரோவாக திகழும் தோர் கதாபாத்திரங்களின் படங்களாக வெளிவந்த தோர், தோர் - தி டார்க் வேர்ல்ட், தோர் - ரேக்னராக் உள்ளிட்ட படங்களில் ரே ஸ்டீவன்சன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 

அதேபோல் தி டிரான்ஸ்போர்ட்டர், GI JOE, ஃபைனல் ஸ்கோர் மற்றும் மெமரி உள்பட பல அதிரடி ஆக்சன் படங்களிலும் ரே ஸ்டீவன்சன் நடித்துள்ளார். இந்த வரிசையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகனாக நடித்து வெளிவந்து இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைத்த RRR திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் ரே ஸ்டீவன்சன் நடித்துள்ளார். தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் 1242 கேட்வே ஆப் தி வேஸ்ட் தொடர்ந்து கேசினோ இன் இஸ்சியா ஆகிய திரைப்படங்கள் ரே ஸ்டீவன்சன் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தனது 58 வது வயதில் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். இது சினிமா ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது மேலும் உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்கள் இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் RRR திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “RRR திரைப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் என்ன ஒரு அதிர்ச்சியான செய்தி! ரே ஸ்டீவன்சன், நீங்கள் எங்களது இதயங்களில் எப்போதும் நிரந்தரமாக இருப்பீர்கள். SIR SCOTT உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும்!” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து RRR எனும் இந்த பிரம்மாண்ட படைப்பின் இயக்குனர் SS.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ரேஸ் ஸ்டீவன்சனுடன் RRR திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பதிவிட்டு, “அதிர்ச்சியாக இருக்கிறது! இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. ரே ஸ்டீவன்சன் படப்பிடிப்பு தளத்தில் மிகுந்த எனர்ஜியோடும் உற்சாகத்தோடும் இருப்பார். அது படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் பரவி இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தாரோடு இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் SS.ராஜமௌலியின் அந்தப் பதிவு மற்றும் புகைப்படம் இதோ…
 

மிர்ச்சி சிவா - யோகி பாபு காமெடி கூட்டணியின் காசேதான் கடவுளடா... சர்ப்ரைஸாக வந்த கலகலப்பான ஸ்னிக் பீக் வீடியோ இதோ!
சினிமா

மிர்ச்சி சிவா - யோகி பாபு காமெடி கூட்டணியின் காசேதான் கடவுளடா... சர்ப்ரைஸாக வந்த கலகலப்பான ஸ்னிக் பீக் வீடியோ இதோ!

சினிமா

"விஜயின் தளபதி 68 பட அறிவிப்புக்கு பின் முதல் கொண்டாட்டம்!"- வெங்கட் பிரபுவிற்கு குவியும் வாழ்த்துகள்... வைரல் புகைப்படங்கள் இதோ!

விடுதலை படத்தையடுத்து கதையின் நாயகனாக சூரியின் அடுத்த படைப்பு... சிவகார்த்திகேயனுடன் இணைந்த புதிய பட அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

விடுதலை படத்தையடுத்து கதையின் நாயகனாக சூரியின் அடுத்த படைப்பு... சிவகார்த்திகேயனுடன் இணைந்த புதிய பட அட்டகாசமான அப்டேட் இதோ!