இதுவரை பார்த்திராத காட்சிகளுடன் வந்த பொன்னியின் செல்வன் 2 சர்ப்ரைஸ்... அட்டகாசமான புது வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட வீரா ராஜ வீரா வீடியோ பாடல்,Ponniyin selvan 2 movie veera raja veera video song mani ratnam | Galatta

பல்லாயிரக்கணக்கான பொன்னியின் செல்வன் வாசகர்களின் கனவுகளை நடமாக்கிய இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரை வடிவமாக மாற்றி விருந்து கொடுத்துள்ளார். அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் எனும் வரலாற்றுப் புனைவு நாவலின் உலகம் முழுக்க பல கோடி வாசகர்களின் மனதை வென்ற இந்த பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இரண்டு பக்கங்களாக பொன்னியின் செல்வனை உருவாக்க, திரைக்கதையில் ஏகப்பட்ட சவால்கள் இருக்கும் அவை அனைத்தையும் மிகச் சரியாக கையாள இயக்குனர் மணிரத்னம் உடன் கைகோர்த்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் இருவரும் திரைக்கதை வசனங்களில் பணியாற்றினர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் கடந்த ஆண்டில் வெளிவந்து 500 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் அதற்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவிலேயே 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலிருந்து ஒரு வீடியோ பாடலை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வீரா ராஜ வீரா பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதுவரை யாரும் பார்த்திராத புதிய காட்சிகளோடு படத்திலும் இடம்பெறாத காட்சிகள் கொண்ட இந்த புதிய வீடியோ பாடலில் பொன்னியின் செல்வன் உடன் இணைந்து வானதி கதாபாத்திரம் கப்பலில் நடனமாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது வெளி வந்திருக்கும் இந்த புதிய காட்சிகள் கொண்ட வீரா ராஜ வீரா வீடியோ பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஃட்ரெண்டாகும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.
 

சினிமா

"இது ஈடுகட்ட முடியாத இழப்பு!"- சரத் பாபுவின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்... உருக்கமான பதிவு இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... ஷங்கர் - அனிருத்தின் எதிர்பாராத சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான இந்தியன் 2... ஷங்கர் - அனிருத்தின் எதிர்பாராத சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

மிர்ச்சி சிவா - யோகி பாபு காமெடி கூட்டணியின் காசேதான் கடவுளடா... சர்ப்ரைஸாக வந்த கலகலப்பான ஸ்னிக் பீக் வீடியோ இதோ!
சினிமா

மிர்ச்சி சிவா - யோகி பாபு காமெடி கூட்டணியின் காசேதான் கடவுளடா... சர்ப்ரைஸாக வந்த கலகலப்பான ஸ்னிக் பீக் வீடியோ இதோ!