விஜய் ஆண்டனி - அருண் விஜயின் ACTION PACKED அக்னி சிறகுகள்... விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு இதோ!

விஜய் ஆண்டனி - அருண் விஜயின் அக்னி சிறகுகள் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,vijay antony arun vijay in agni siragugal movie release announcement | Galatta

நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் ஆண்டனி - அருண் விஜய் காம்போவின் அக்னி சிறகுகள் திரைப்படத்தின் சர்ப்ரைஸான அறிவிப்பு ஒன்றை விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான இன்று ஜூலை 24ம் தேதி படக் குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் இந்த ஆண்டு வரிசையாக தமிழரசன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த விஜய் ஆண்டணியின் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமான கொலை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அசத்தலான படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக நடித்திருக்கும் ரத்தம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து விஜய் ஆண்டனி நபிப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் ஆண்டனி மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. 

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.சிவா அவர்கள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த அக்னி சிறகுகள் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் உடன் இணைந்து அக்ஷரா ஹாசன் , நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் K.A.பாட்ஷா ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்திருக்கும் அக்னி சிறகுகள் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தனது மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் நவீன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த அக்னி சிறகுகள் திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்த நிலையில் ரிஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்று ஜூலை 24ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் விஜய் ஆண்டனி அவர்களின் பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் வகையில் அக்னி சிறகுகள் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்னி சிறகுகள் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பை புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் ஆண்டனி அதிரடியான அந்த போஸ்டர் இதோ…
 

#அக்னிச்சிறகுகள்#AgniSiragugal#OctoberRelease pic.twitter.com/cU7tJpLKqn

— NaveenHidayatAli (@NaveenFilmmaker) July 24, 2023

“நான்தான் பாட போறேன்னே எனக்கு தெரியாது..” துருவ நட்சத்திரம் பாடல் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பால் டப்பா.. – Exclusive Interview இதோ..
சினிமா

“நான்தான் பாட போறேன்னே எனக்கு தெரியாது..” துருவ நட்சத்திரம் பாடல் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பால் டப்பா.. – Exclusive Interview இதோ..

“அவருக்கும் எனக்கும் போட்டி என்பதே கிடையாது..” விஜய் சேதுபதி குறித்து மாவீரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல் – வீடி
சினிமா

“அவருக்கும் எனக்கும் போட்டி என்பதே கிடையாது..” விஜய் சேதுபதி குறித்து மாவீரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல் – வீடி

“வயசாயிடுச்சு.. அதனால லவ் படமெல்லாம் வேண்டாம்..” தனுஷ் பகிர்ந்த தகவல்.. வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“வயசாயிடுச்சு.. அதனால லவ் படமெல்லாம் வேண்டாம்..” தனுஷ் பகிர்ந்த தகவல்.. வைரல் வீடியோ உள்ளே..