"கார்த்தி27"- 96 பட இயக்குனருடன் கார்த்தி & அரவிந்த் சுவாமி இணையும் புதிய படம்... முன்னணி ஒளிப்பதிவாளரின் அட்டகாசமான அறிவிப்பு!

96 பட இயக்குனருடன் கார்த்தி & அரவிந்த் சுவாமி இணையும் புதிய படம்,Karthi next movie with arvind swami and 96 director prem kumar | Galatta

நடிகர் கார்த்தி தனது திரைப்பயணத்தில் 27 வது திரைப்படமாக நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை முன்னணி ஒளிப்பதிவாளர் ப. சி.ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து விதவிதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி கடந்த ஏப்ரல் மாதம் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தில் வல்லவராயன் வந்தியதேவன் என்ற கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த மக்களின் மனதையும் கவர்ந்தார். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் திரைப்பயணத்திலேயே வித்தியாசமான திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தனது 26 ஆவது திரைப்படமாக உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் உருவாகும் கார்த்தி 26 திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். இது குறித்து இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் கார்த்தி அடுத்த நடிக்கும் அவரது 27 வது படமான கார்த்தி 27 படத்தின் முக்கிய அறிவிப்பை தேசிய விருது வென்றவரும் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளருமான பிசி.ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து கார்த்தியின் இந்த புதிய திரைப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான 96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தனது அடுத்த படைப்பாக இயக்கும் இந்த புதிய படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

இதுகுறித்து பிசி.ஸ்ரீராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது அடுத்த ப்ராஜெக்ட் 96 என்ற அற்புதமான காதல் கதை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் உடன்.. இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி இணைந்து நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். அதன் தேதிகள் விரைவில் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அறிவிக்கும்" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவு இதோ…
 

My next project will be with @dirpremkumar96 ,who gave the ultimate love story, 96. The project will have @Karthi_Offl and @thearvindswami, with music from #GovindVasantha & produced by @2D_ENTPVTLTD @Suriya_offl #jyotika @rajsekarpandian .Dates will be announced by 2D soon.

— pcsreeramISC (@pcsreeram) July 26, 2023

“அரசன் வருகிறார்..” சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. - அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

“அரசன் வருகிறார்..” சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. - அட்டகாசமான Glimpse இதோ..

MSதோனி தயாரிப்பு - ஹரிஷ் கல்யாணின் LGM பட புது ட்ரீட்… 'லவ் டுடே' இவானா - சாண்டி மாஸ்டரின் கலக்கலான இஸ் கிஸ் கிஃபா பாடல்!
சினிமா

MSதோனி தயாரிப்பு - ஹரிஷ் கல்யாணின் LGM பட புது ட்ரீட்… 'லவ் டுடே' இவானா - சாண்டி மாஸ்டரின் கலக்கலான இஸ் கிஸ் கிஃபா பாடல்!

“நான்தான் பாட போறேன்னே எனக்கு தெரியாது..” துருவ நட்சத்திரம் பாடல் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பால் டப்பா.. – Exclusive Interview இதோ..
சினிமா

“நான்தான் பாட போறேன்னே எனக்கு தெரியாது..” துருவ நட்சத்திரம் பாடல் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பால் டப்பா.. – Exclusive Interview இதோ..