"1000 பெண் டான்ஸர்களுக்கு நடுவில் ஷாரூக் கான்"- அட்லீயின் ஜவான் பட விஷுவல் ட்ரீட் குறித்த ருசிகர தகவல் இதோ!

ஜவான் படத்தில் ஆயிரம் பெண் டான்ஸர்களுடன் நடனமாடும் ஷாருக்கான்,shah rukh khan dancing with 1000 female dancers for jawan song | Galatta

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரும் ஜவான் படத்தின் ஜிந்தா பிந்தா பாடலுக்கு ஷாரூக் கான் 1000 பெண் டான்ஸர்களுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார். இந்த வரிசையில் ஷாருக் கான் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் ஜவான். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. 

ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஜிந்தா பிந்தா என்ற பாடலுக்கு ஆயிரம் பெண் டான்ஸர்களுடன் இணைந்து ஷாருக்கான் நடனமாடி இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது. இந்த பாடலுக்கு முன்னணி நடன இயக்குனர் சோபி மாஸ்டர் நடன இயக்கம் செய்திருப்பதாக தெரிகிறது. 

வழக்கமாகவே இயக்குனர் அட்லீயின் திரைப்படங்களில் எக்கச்சக்க டான்ஸர்களுடன் வரும் பாடல்கள் எல்லாம் விஷுவல் ட்ரீட்டாக அமையும், குறிப்பாக தெறி படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி, மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன், பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் உள்ளிட்ட பாடல்கள் தியேட்டர்களில் கொண்டாடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது ஷாருக் கானின் ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஜிந்தா பிந்தா பாடலும் தியேட்டரில் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

“எங்களின் வலி, வலிமையாய் ஒலித்திருக்கிறது” உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடன் அநீதி படக்குழு.. வைரல் பதிவு இதோ..
சினிமா

“எங்களின் வலி, வலிமையாய் ஒலித்திருக்கிறது” உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடன் அநீதி படக்குழு.. வைரல் பதிவு இதோ..

விஜய் ஆண்டனி - அருண் விஜயின் ACTION PACKED அக்னி சிறகுகள்... விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

விஜய் ஆண்டனி - அருண் விஜயின் ACTION PACKED அக்னி சிறகுகள்... விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு இதோ!

“அரசன் வருகிறார்..” சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. - அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

“அரசன் வருகிறார்..” சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. - அட்டகாசமான Glimpse இதோ..