தனது முதல் திரைப்படமான மூடர்கூடம் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் நவீன். இதனை அடுத்து இவர் இயக்கிய அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படம் நிறைவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதனிடையே நவீன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் அக்னிசிறகுகள்.

அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள அக்னி சிறகுகள் திரைப்படத்தில் அக்சராஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், ரெய்மா சென், சென்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சிவா தயாரித்துள்ள அக்னிசிறகுகள் திரைப்படம் ரஷ்யா, சுவிட்சர்லாந்து மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. அக்னி சிறகுகள் படத்திற்கு K.A.பாட்சா ஒளிப்பதிவில், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் அக்னி சிறகுகள் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அக்னி சிறகுகள் திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட்டகாசமான  அக்னி சிறகுகள் டீசர் இதோ…