லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து தமிழக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன்.  விளம்பரப் படங்களில் நடித்த லெஜண்ட் சரவணன் தற்போது தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ள லெஜண்ட் சரவணன் பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் படத்திற்கு  R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தி லெஜண்ட் படத்திலிருந்து வெளிவந்த மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடி வாசல் வீடியோ பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

முன்னதாக வருகிற மே 29-ம் தேதி தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நட்சத்திர நாயகிகளான தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா, ஊர்வசி ரௌடல்லா, ராய் லக்ஷ்மி, ஷரதா ஸ்ரீநாத், ஸ்ரீ லீலா, யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனான் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.